கொரோனா எதிரொலி: சென்னை மெட்ரோ ரயில் சேவையில் திடீர் மாற்றம்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை குறைப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே பள்ளிகள், கல்லூரிகள், தியேட்டர்கள், மால்கள் மற்றும் கடைவீதிகள் மூடப்பட்டுள்ள நிலையில் அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகள் தமிழக அரசிடம் இருந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன
தமிழக எல்லைகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளது என்பதும், சென்னையில் உள்ள மெரினா கடற்கரை உள்ள அனைத்து கடற்கரைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டும் அடுத்தடுத்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதனால் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 23ஆம் தேதி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை சென்னை மெட்ரோ ரயில் சேவையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி காலை 6 மணி முதல் காலை 8 மணி வரை அத்தியாவசிய பயணிகளுக்கு மட்டும் அதாவது அலுவலகங்களுக்கு செல்பவர்களுக்கு மட்டுமே மெட்ரோ ரயிலில் அனுமதி என்றும் அதே போல் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை அலுவலங்களில் இருந்து வீடு திரும்புவர்களுக்கு மட்டுமே மெட்ரோ ரயிலில் அனுமதி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.