1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 25 ஜூன் 2022 (08:29 IST)

மீண்டும் இயல்புக்கு வந்தது மெட்ரோ ரயில் சேவை: நிர்வாகம் அறிவிப்பு!

metro
தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ ரயில் இரு தளங்களிலும் பத்து நிமிடங்கள் தாமதமாக இயங்குகிறது என வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு வருவதாகவும் விரைவில் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்ட உடன் மெட்ரோ ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் மெட்ரோ ரயில்வே நிர்வாகம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
 
இந்நிலையில் தற்போது தொழில்நுட்ப கோளாறு முழுமையாக சரி செய்யப்பட்டதை அடுத்து மெட்ரோ ரயில் சேவை தற்போது மீண்டும் தொடங்கி உள்ளது என்றும் இன்று அதிகாலை 5 மணி முதல் அனைத்து வழித்தடத்திலும் மெட்ரோ ரயில் சேவை இயங்கும் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது