சென்னையில் விடாமல் பெய்யும் மழை: உடனடி உதவிக்கு வாட்ஸப் சேவை!

Prasanth Karthick| Last Modified ஞாயிறு, 1 டிசம்பர் 2019 (09:32 IST)
சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் மூன்று நாட்களுக்கு மிதமான மற்றும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் நேற்று மாலையிலிருந்தே பல பகுதிகளில் விடாமல் மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் சென்னையில் பல இடங்களில் மழை நீர் தேங்கவும், வெள்ள பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பிருப்பதால் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மழை வெள்ள பாதிப்புகளை கண்காணிக்கவும், நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் மாநகராட்சி 24 மணிநேர கட்டுப்பாட்டு அறையை தொடங்கியுள்ளது. சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்கி இருந்தால் 044-25384520, 044-25384530, 044-25384540 மற்றும் 94454-77205 என்ற வாட்ஸப் எண்களில் தகவல் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இதில் மேலும் படிக்கவும் :