வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 8 மார்ச் 2022 (08:34 IST)

10ம் தேதி வரை இடி மின்னலுடன் மிதமான மழை: வானிலை ஆய்வு மையம்

தமிழகம், புதுச்சேரியில் 10ம் தேதி வரை இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 
குறிப்பாக சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், மற்றும் டெல்டா மாவட்டங்களில் மணிக்கு  45 கி.மீ காற்று வீசும் என்றும், வட தமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில்  சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும்  சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், தாழ்வுப்பகுதியாக மாறியதை அடுத்தே மார்ச்சில் கனமழை பெய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.