1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai meteorological says today rain in seven districts

இன்று 17 மாவட்டங்களில் கனமழை, 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை எச்சரிக்கை

Chennai rain
தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து சென்னை உள்பட தமிழக மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது 
 
தமிழகம் மற்றும் வட இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நவம்பர் 2 ஆம் தேதியான இன்று கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய 17 மாவட்டங்களில் கனமழை ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது
 
மேலும் நவம்பர் 3, நவம்பர் 4 மற்றும் நவம்பர் 5 ஆகிய மூன்று நாட்கள் தொடர்ச்சியாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் நகரின் பல இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
டுவிட்டர் புளுடிக் கட்டணம் எவ்வளவு? எலான் மஸ்க் அதிகாரபூர்வ டுவிட்