1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 18 டிசம்பர் 2023 (14:31 IST)

குமரி கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

குமரி கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு தரப்பட்ட ரெட் அலர்ட் தொடர்கிறது என கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 5% அதிகமாக பதிவாகியிருப்பதாகவும், நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
 
மேலும் குமரி கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும், விருதுநகர், தேனி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு எனவும், நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எனவும், கடந்த 24 மணிநேரத்தில் 39 இடங்களில் அதிகனமழை பெய்துள்ளது என்றும், அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 95% மழைப்பதிவாகியுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
 
இந்த நிலையில் தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணி தீவிரமாக நடந்து வருகிறத்ஜு. அதேபோல் கோரம்பள்ளம் குளம் உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்ததால் தூத்துக்குடி மூழ்கும் அபாயம் இருப்பதாகவும், பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும் அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.
 
Edited by Mahendran