4 மாவட்டங்களில் கனமழை.. மீட்பு நடவடிக்கைக்காக கூடுதலாக 4 அமைச்சர்கள் நியமனம்..!
நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவி மற்றும் மீட்பு நடவடிக்கைகளை வேகப்படுத்த கூடுதலாக 4 அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து வெளியான செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பெய்து வரும் கன மழை காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களில் இருந்து மீட்கவும் தேவையான உதவிகளை உடனடியாக வழங்கிடவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஏற்கனவே அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், அமைச்சர் தங்கம் தென்னரசு, அமைச்சர் கீதா ஜீவன், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர்கள் அனுப்பப்பட்டு மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை போர்க்கால அடிப்படைகள் அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கனிமொழி எம்பி, ஞான திரவியம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கூடுதலாக தற்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் ராஜகண்ணப்பன், அமைச்சர் பி மூர்த்தி, அமைச்சர் ஏதோ வேலு ஆகியோர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Edited by Mahendran