செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 7 ஜூலை 2022 (16:10 IST)

மெரீனாவில் அதிகமாகும் பலி எண்ணிக்கை: காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!

marina
சென்னை மெரினாவில் பொதுமக்கள் குளிக்க அனுமதி இல்லை என்று கூறப்பட்டிருந்தாலும் தடையை மீறி பலர் குளித்து வருகின்றனர் என்பதும் இதனை அடுத்து அலைகளில் அடித்துச் செல்லப்பட்டு பலியாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது
 
மெரினாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் குளிக்கக் கூடாது என்று காவல்துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்த போதிலும் ஒவ்வொரு மாதமும் மெரினாவில் குளிப்பதால் பலியாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது 
 
இதை அடுத்து தற்போது மெரினாவில் ட்ரோன் மூலம் கண்காணிக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்
 
 தடையை மீறி குளிப்பதை ட்ரோன் மூலம் கண்டுபிடித்து விட்டால் உடனே அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்று எச்சரிக்கை நடவடிக்கை எடுப்பார்கள் என்பது இந்த கதையை.