ரஸ்னா குளிர்பான நிறுவனர் மாரடைப்பால் காலமானார்: தொழிலதிபர்கள் இரங்கல்
ரஸ்னா குளிர்பான நிறுவனர் மாரடைப்பால் காலமானார்: தொழிலதிபர்கள் இரங்கல்
சிறுவர்கள் மிகவும் விரும்பி அருந்தும் ரஸ்னா குளிர்பான நிறுவனத்தை நிறுவிய நிறுவனர் மாரடைப்பால் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளன.
நகரம் முதல் கிராமம் வரை சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்பி குடிக்கும் பானமாக ரஸ்னா இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் நகரை சேர்ந்த அரிஸ் பிரோஜ்ஷா என்பவர் இந்த நிறுவனத்தை தொடங்கினார் என்பதும் இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அவர் பல வருடங்கள் கடுமையாக உழைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் குஜராத்தின் அகமதாபாத் நகரில் வசித்து வந்த ரஸ்னா நிறுவன அரிஸ் பிரோஜ்ஷா என்பவர் கடந்த சில மாதங்களாக உடல் நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவந்தார்
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் சற்றுமுன் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வயது 85. ரஸ்னா நிறுவனரின் மறைவுக்கு தொழிலதிபர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Edited by Siva