1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 21 ஜனவரி 2022 (17:49 IST)

தமிழ்த்தாய் வாழ்த்தில் செய்த திருத்தம் செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம்!

முன்னாள் முதல்வர் கருணாநிதி தமிழ்த்தாய் வாழ்த்தில் செய்த திருத்தம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
 
கடந்த 1070 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி தமிழ்த்தாய் வாழ்த்தில் சில மாற்றங்கள் செய்ததாகவும், இந்த மாற்றத்தை எதிர்த்து பதிவு செய்யப்பட்ட வழக்கு கடந்த சில மாதங்களாக விசாரணையில் இருந்த நிலையில் தற்போது அதில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது 
 
57 ஆண்டுகளுக்கு முன் செய்த திருத்தத்தை எதிர்த்து தற்போது வழக்கு பதிவு செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தமிழ் தாய் வாழ்த்தில் திருத்தம் செய்ய தமிழக அரசுக்கு உரிமை உண்டு என்றும் தமிழக அரசின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் தமிழ் தாய் வாழ்த்தில் செய்த திருத்தம் செல்லும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.