1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 14 டிசம்பர் 2018 (08:52 IST)

ரஃபேல் :ஊழலா? ஊதிப்பெருக்கப்பட்டதா ? – இன்று வருகிறது தீர்ப்பு

ரஃபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், அனைத்துத்  தரப்பு விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், இன்று (டிசம்பர் 14) உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்க இருக்கிறது.

போர் விமானங்களை வாங்குவது குறித்து காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே பிரான்ஸ் அரசுடன் ஒப்ப்ந்தம் போடப்பட்டது. ஆனால் ஆட்சி மாறியதும் பாஜக அரசு பிரான்ஸ் நாட்டுடனான ஒப்பந்தத்தில் சில திருத்தங்களைக் கொண்டு வந்தது. அதனடிப்படையில் விமானங்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது. அதேப்போல விமானங்களுக்கான தொகையும் அதிகமானது. மேலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விமானங்களை இந்தியாவில் செய்ய பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏர்போர்ஸ் கொடுக்காமல் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு விமானங்கள் செய்வதில் எவ்வித முன்னனுபவம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.பிரான்ஸின் முன்னாள் பிரதமர் பிரான்கோஸ் ஓலாந் இந்தியா எங்களுக்கு ரிலையன்ஸை தவிர வேறு கம்பெனிகளை பரிந்துரை செய்யவில்லை என்று கூறியதும் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது.

எனவே பிரான்ஸுடனான ஒப்பந்தத்தில் விமானங்களுக்கு விலை நிர்ணயம் செய்தது முதல் பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதற்கு ரிலையன்ஸ் நிறுவனத்தைத் தேர்வு செய்தது வரை ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். தற்போது நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் ரஃபேல் ஒப்பந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்ககில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இந்த வழக்கில் ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதில் கடைப்பிடிக்கப்பட்ட கொள்கை முடிவுகள் குறித்த 14 பக்க அறிக்கையை மத்திய அரசு சமர்ப்பித்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கைத் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வெளிவர இருக்கிறது.