1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : திங்கள், 16 மார்ச் 2020 (12:48 IST)

கொரோனா எதிரொலி: மூடப்படுமா டாஸ்மாக் கடைகள்? – மதுவிரும்பிகள் கவலை!

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டாஸ்மாக் கடைகளை மூடுவது குறித்து தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் மத்திய மாநில அரசுகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தமிழகத்தில் 16 மாவட்டங்களில் தியேட்டர்கள், வணிக வளாகங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் வணிக வளாகங்களை மூடுவது போல கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக டாஸ்மாக் கடைகளையும் மூடவேண்டும் என கோரப்பட்டுள்ளது. டாஸ்மாக் மற்றும் அதை ஒட்டி இயங்கும் பார்கள் சுகாதாரமற்றவையாக இருப்பதால் கொரோனா பரவும் ஆபத்து அதில் அதிகம் இருப்பதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு குறித்து விசாரணை மேற்கொண்ட உயர்நீதிமன்றம் இதுகுறித்து ஒரு வாரத்தில் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் டாஸ்மாக் மூடப்பட்டுவிடுமோ என மது விரும்பிகள் இடையே பதட்டம் எழுந்துள்ளது.