திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 24 டிசம்பர் 2020 (12:56 IST)

திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவுக்கு அனுமதி! – விதிமுறை மீறினால் அபராதம்!

கொரோனா பரவல் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கலாம் என பதற்றம் நிலவி வருவதால் சனிப்பெயர்ச்சி விழாவை கட்டுபாடுகளுடன் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனாவால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கும்பகோணம் அருகே உள்ள திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் சனிப்பெயர்ச்சி திருவிழா நடைபெற உள்ளது. வழக்கமாக இந்த சனிப்பெயர்ச்சி விழாவிற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் தமிழகம் முழுவதிலுமிருந்து வருவார்கள் என்பதால் பாதுகாப்பு கருதி விழா நடத்த அனுமதி மறுக்கப்பட்டது.

இதுகுறித்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சனிப்பெயர்ச்சி விழாவை நடத்த அனுமதி அளித்துள்ளது. ஆனால் கொரோனா தடுப்பு விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்றும், கொரோனா தடுப்பு விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளது.