ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 20 செப்டம்பர் 2021 (08:48 IST)

பானிபூரி விற்பவருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்: காரணம் இதுதான்!

பானிபூரி விற்பவருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்: காரணம் இதுதான்!
சென்னையில் பானிபூரி விற்பனை செய்யும் வடமாநில இளைஞர் ஒருவருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சென்னை அம்பத்தூர் பகுதியில் வடமாநில இளைஞர் ஒருவர் வழக்கமாக பானிபூரி விற்பனை செய்து வருவதால் பலர் மிகவும் விரும்பி அவரிடம் பானிபூரி வாங்கி சாப்பிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அவரே உருளைக்கிழங்கு வாங்கி பானி பூரி தயார் செய்து விற்பனை செய்து வந்த நிலையில் நேற்று இளைஞர் ஒருவர் பானிபூரி சாப்பிடும் போது உருளைக்கிழங்கில் துர்நாற்றம் வீசியுள்ளது. மேலும் அதை சோதனை செய்தபோது அதில் புழுக்கள் இருந்தது தெரியவந்தது 
இதனை அடுத்து உருளைக்கிழங்கு வேக வைத்து பல நாட்கள் ஆனபின் கெட்டுப்போன உருளைக்கிழங்கை சூடு செய்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் பானிபூரி விற்ற வடமாநில இளைஞரை கட்டி வைத்து தர்ம அடி கொடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
 
இதனை அடுத்து இது குறித்து கேள்விப்பட்ட அம்பத்தூர் காவல்துறையினர் அந்த இளைஞரை மீட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது