மிக்ஜாம் புயல் எதிரொலி! நாளை அனைத்து திரையரங்குகளிலும் காட்சிகள் ரத்து?
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் திரையரங்குகளில் காட்சிகளை ரத்து செய்ய திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் ஆலோசித்து வருகிறது.
வங்க கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக இன்றும், நாளையும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 80 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பலவற்றிலும் விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களில் வீட்டிலிருந்து பணியாற்ற கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் புயல் காரணமாக நாளை சென்னை உள்ளிட்ட பகுதிகளில் திரையரங்குகளில் அனைத்து காட்சிகளையும் ரத்து செய்வது குறித்து திரையரங்க உரிமையாளர்கள் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பொதுமக்கள் அதிகம் வெளியே செல்ல முடியாத நிலையில் திரையரங்குகள் செயல்படுவது சரியானதல்ல என்பதால் இதுகுறித்த அறிவிப்பை திரையரங்க, மல்டிப்ளெக்ஸ் உரிமையாளர்கள் விரைவில் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edit by Prasanth.K