திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: சனி, 14 அக்டோபர் 2017 (14:30 IST)

எண்ணூர் துறைமுகத்தில் பாதிப்பை ஏற்படுத்திய கப்பல் சிங்கப்பூர் புறப்பட்டது

கடந்த ஜனவரி மாதம் ஈரானை சேர்ந்த மேபிள் கப்பல், சென்னை துறைமுகம் பகுதியில் டான் காஞ்சிபுரம் கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து காரணமாக கப்பலில் இருந்த எண்ணெய் கழிவுகள் கடலில் கலந்தது. இதனால் எண்ணூர் உள்பட அந்த பகுதியின் கடலோர பகுதிகளில் எண்ணெய் கழிவுகளின் படலம் பெரும் அச்சத்தை கொடுத்தது



 
 
இந்த நிலையில் விபத்துக்கு காரணமான கப்பல் சென்னை துறைமுகத்தில் கடந்த ஒன்பது மாதங்களாக சிறை வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் இன்று மீண்டும் சிங்கப்பூர் புறப்பட்டது.
 
இந்த கப்பல் விபத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கு இழப்பீடாக ரூ.203 தர கப்பல் உரிமையாளர் ஒப்புக்கொண்டுள்ளதால் நீதிமன்றம் இந்த கப்பலை செல்ல அனுமதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.