புதன், 27 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Sasi)
Last Modified: சனி, 14 அக்டோபர் 2017 (12:19 IST)

சென்னையில் சமந்தா – நாக சைதன்யா திருமண வரவேற்பு?

சமந்தா – நாக சைதன்யாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடக்க இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.

 
சமந்தா – நாக சைதன்யாவின் திருமணம், கடந்த வாரம் கோலாகலமாக கோவாவில் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் 100 பேர் மட்டுமே இதில் கலந்து கொண்டனர். விரைவில் ஹைதராபாத்தில் பிரம்மாண்டமான வரவேற்பு நடக்க உள்ளது.  சினிமாத்துறை உள்ளிட்ட பிரபலங்கள் இதில் கலந்துகொள்ள உள்ளனர்.
 
அதற்கு முன்னர், சென்னையிலும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்க இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. நாக சைதன்யாவின் அம்மாவான லட்சுமி, கணவர் நாகர்ஜுனாவை விவாகரத்து செய்துவிட்டு, வேறொரு திருமணம் செய்துகொண்டு சென்னையில்  வசித்து வருகிறார். அவர், தன் மகனின் திருமண வரவேற்பை சென்னையில் நடத்த ஆசைப்படுகிறாராம். அவர் சொந்தங்கள்  மட்டுமே இதில் கலந்துகொள்ள இருக்கின்றனர் என்கிறார்கள்.