ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 1 டிசம்பர் 2017 (07:27 IST)

சென்னை உள்பட 9 மாவட்டங்களுக்கு பள்ளி விடுமுறை

ஓகி புயல் காரணமாக நேற்று குமரி மாவட்டம் உள்பட தென்மாவட்டங்கள் புரட்டி போடப்பட்ட நிலையில் இன்றும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் இன்று சென்னை உள்பட 9 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை என அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர். அதாவது  சென்னை, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி,தேனி, விழுப்புரம், மதுரை, காஞ்சிபுரம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றும் இதேபோல் 8 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளும் வழக்கம் போல் நடைபெறும் என தெரிகிறது. இருப்பினும் இன்று நடைபெறுவதாக இருந்த நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வுகள் மட்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அறிவித்துள்ளார்.