அடுத்தடுத்து 7 பேர்களை திருமணம் செய்த இளம்பெண் கைது

Last Modified திங்கள், 19 நவம்பர் 2018 (21:19 IST)
ஆந்திராவில் ஒருசில மாத இடைவெளியில் அடுத்தடுத்து 7 பேர்களை திருமணம் செய்த இளம்பெண் மற்றும் அவரது தந்தை கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திராவை சேர்ந்த கித்தலூர் என்ற பகுதியை சேர்ந்த மோனிகா என்ற இளம்பெண், பணக்கார இளைஞர்களை தேர்வு செய்து காதலித்து அவரை திருமணம் செய்து அதன்பின் சில நாட்களில் அந்த இளைஞரிடம் இருந்து பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை அபகரித்து பின்னர் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டதாக கூறுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.

இந்த நிலையில் ராமகிருஷ்ணா ரெட்டி என்பவரையும் சமீபத்தில் மோனிகா திருமணம் செய்து அவரிடம் இருந்து பல லட்சம் மோசடி செய்துள்ளார். இதனையடுத்து
ராமகிருஷ்ணா ரெட்டி கொடுத்த புகாரின் அடிப்படையில் மோனிகாவிடம் போலீசார் விசாரணை செய்ததில் அவர் இதேபோல் ஏழு பணக்கார வாலிபர்களை திருமணம் செய்து அவர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் மோசடி செய்தது தெரிய வந்தது.

இதனையடுத்து மோனிகா, அவரது தந்தை ஆனந்தா ரெட்டி மற்றும் மோனிகாவின் நண்பர் சண்டி ஆகிய மூவரை போலீசார் கைது செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :