திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Updated : திங்கள், 11 ஜூலை 2016 (17:41 IST)

கரூர் மாவட்ட பா.ஜ.க தலைவர் பதவியிலிருந்து திடீர் நீக்கமா?

கரூர் மாவட்ட முன்னாள் தலைவராக இருந்தவர் கே.சிவசாமி, இவர் ஏராளமான போராட்டங்கள் மணல் கொள்ளைக்கு எதிராக நடத்தியும், அப்போதைய மாநில தலைவரும், தற்போதைய மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் இருக்கும் போது மணல் குவாரிகளை ஆய்வு செய்ததோடு, ஆங்காங்கே பொதுமக்கள் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்து பல கட்ட பிரச்சினைகளை கையில் எடுத்து போராட்டம் நடத்தினார். 


 

 
ஆனால் தற்போது நியமிக்கப்பட்டுள்ள கரூர் மாவட்ட பா.ஜ.க தலைவர் நீ.முருகானந்தம், கரூர் மாவட்டம், குளித்தலை தொகுதியில் உள்ள இலாலாபேட்டை பகுதியில் உள்ள சிந்தலவாடி பஞ்சாயத்தை சார்ந்தவர். 
 
ஆனால் இவர் எளிய முறையில் இருந்தாலும் இந்தியாவிலேயே மிகவும் குப்பைக்கிடங்காகவும், தண்ணீர் பிரச்சினையும், அடிப்படை வசதிகள், தெருவிளக்கு எதுவும் இல்லாத நிலையில், சாலை வசதிகள் இல்லாததாலும், மொத்தத்தில் பஞ்சாயத்து நிர்வாகம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. 
 
இவர் இதை எதிர்த்து போராடவில்லை, காரணம் பஞ்சாயத்து செயலாளர் ராஜரத்தினம் என்பவர் இவருக்கு நண்பர் என்ற ஒரே காரணத்தினாலும், இந்த ராஜரத்தினம் என்பவருடைய தந்தை கடந்த முறை நடைபெற்ற அதாவது 2011-க்கு முன்னர் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் கிருஷ்ணராயபுரம் ஒன்றியக்குழு தலைவர் ஆவதற்காக, அனைத்து கவுன்சிலர்களையும் கடத்தி சென்றவர் என்று கூறப்படுகின்றது. 
 
அ.தி.மு.க வை சார்ந்த இந்த ராஜரத்தினம், இவருடைய சித்தப்பா தான் பஞ்சாயத்து தலைவராக பல முறை இருந்து வந்த நிலையில் திடீர் மாரடைப்பால் ஒரு வருடத்திற்கு முன்னர் இறந்தார். 
 
இந்நிலையில் தற்போது தன் தந்தைக்கு ஒன்றியக்குழு தலைவர் பதவி கிடைக்கவில்லை என்றும், நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ராஜரத்தினத்தின் தந்தை என்.பி.ஏ.கணேசன், குளித்தலை தொகுதி கழக செயலாளராக இருந்ததோடு, எம்.எல்.ஏ சீட்டிற்காக அ.தி.மு.க வில் பணம் கட்டியிருந்தார். 
 
இந்நிலையில் அவருடைய தந்தைக்கு சீட்டு கிடைக்காத நிலையில் தி.மு.க-வை திட்டமிட்டு தந்தையும், மகனும் ஜெயிக்க வைத்துள்ளதாகவும், தற்போது வர இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் தன் தந்தைக்கு ஒன்றியக்குழு தலைவர் பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக, கடந்த ஒரு வருடமாக குடிநீர் பிரச்சினையை உருவாக்கி, பல கிராமங்களை முடக்கி வைத்துள்ளார். 
 
இதையெல்லாம் தட்டிக் கேட்கும் கரூர் மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் இவருடைய நண்பர்தான் இந்த செயலில் ஈடுபடுவதையறிந்து வாய்திறக்காமல் உள்ளார். இதையறிந்த அப்பகுதி மக்களும், பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகளும் தற்போது மாறி, மாறி புகார் தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் ஒரு மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக பொறுப்பு வகிக்கும் இவர் தன்னுடைய பஞ்சாயத்து நிர்வாகத்தை தட்டி கேட்காமல் வாயடைத்த நிலை தற்போது கவலைக்கிடமாக இருப்பதாலும், நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க கட்சி மற்றும் கூட்டணியினர் பெற்ற வாக்கு சதவிகிதம் சரிந்ததற்கு காரணம் இவர்தான் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்ததோடு, விரைவில் இவருடைய பாரதீய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் பதவி பறிபோகும் நிலையில் தள்ளப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
சி.ஆனந்தகுமார் – செய்தியாளர் – கரூர் மாவட்டம்