Daily Horoscope
✕

சந்திரபிரியங்கா 3 நாட்களுக்கு முன்பே பதவியில் இருந்து நீக்கப்பட்டார்: சபாநாயகர் விளக்கம்..!

Written By Mahendran
Updated: வியாழன், 12 அக்டோபர் 2023 (14:26 IST)
புதுச்சேரி   போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா நேற்று தன் பதவியை ராஜினாமா செய்ததாக செய்தி வெளியான நிலையில் அவர்  3 நாட்களுக்கு முன்பே பதவியில் இருந்து  நீக்கப்பட்டார் என புதுவை சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி   போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா நேற்று தன் ராஜினாமா கடிதத்தை முதல்வர் ரங்கசாமிக்கு, துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தர ராஜனுக்கும் அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியானது.

ஆனால் இது குறித்து விளக்கம் அளித்த சபாநாயகர் செல்வம், ‘சந்திரபிரியங்கா 3 நாட்களுக்கு முன்பிருந்தே பதவியில் இருந்து  நீக்கப்பட்டார் என்று தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, வெற்றி பெற்ற சந்திர பிரியங்கா, முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில்  போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Mahendran

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments