அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சந்திர பிரியங்கா
புதுச்சேரி யூனியனில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.
இங்கு, புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகள் சந்திரா பிரியங்கா( 33வயது).
இவர் அங்கு பிரபல அரசியல்வாதியாக செயல்பட்டு வருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார்.
இவர் அங்கு பிரபல அரசியல்வாதியாக செயல்பட்டு வருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார்.
எனவே, முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் சந்திர பிரியங்காவுக்கு போக்குவரத்துறை ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில், புதுச்சேரி போக்குவரத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா இன்று தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தன் ராஜினாமா கடிதத்தை முதல்வர் ரங்கசாமிக்கும், துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுக்கும் அனுப்பி வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.