திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: புதன், 13 அக்டோபர் 2021 (15:29 IST)

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

அடுத்த 24 மணிநேரத்தில் அந்தமான் மற்றும் அதனையொட்டிய வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதனால் சென்னையில் 2 தினங்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும்,  வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, விழுப்புரம், கோவை,  கடலூஉர், ஈரோடு, சேலம் , ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.