புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Anadakumar
Last Updated : வெள்ளி, 8 ஜனவரி 2021 (22:55 IST)

திருத்தொண்டர் சபை தலைவர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பு

திருக்கோயில் நிலங்கள் 5 1/4 லட்சம் ஏக்கர் தனியார் வசம் உள்ளது என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது அடுத்த சட்டப்பேரவை மானிய கோரிக்கையில் அது 4 3/4 லட்சம் ஏக்கராக வைத்து காண்பிக்கப்பட்டது.

கோவில் நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. திருக்கோயில்கள் அறநிலை துறையில் உள்ளவர்கள் அறநிலையத்துறை ஆக இல்லாமல், புரோக்கர் துறையாக  மாறியுள்ளது. புல்லுருவிகளை களையெடுக்க வேண்டும் அறநிலையத்துறை சொத்துகளை மீட்க  வருவாய்த்துறை பத்திரப்பதிவுத்துறை மின்வாரிய துறை உள்ளாட்சி துறை ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருக்கோயில் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆணையர் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார். பட்ஜெட் கூட்டத் தொடருக்கு ஆகும் செலவு தொகையை திருக்கோயில் நிலங்களை முறைப்படுத்தி  அதன் மூலம் வரும் சொத்துக்கள் அதிகமாக இருக்கும் இவ்வாறு அவர் கூறினார். மேலும் அதைத் தொடர்ந்து கரூரில் உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் உட்பிரகாரத்தில் ஆவின் பால் பொருட்கள் விற்பனை நிலையத்தில் நெய், பால் பொருட்களின் தரம்  மற்றும் காலாவதியான பொருட்கள் விற்கப்படுகிறது என்று ஆய்வு மேற்கொண்டார்