ஓட்டுனர் உரிமம் கால அவகாசம் நீட்டிப்பு: மத்திய அரசு அறிவிப்பு!
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தேர்வுகள் ரத்தானது என்பதும் பல முக்கிய நடைமுறைகள் தள்ளி போடப்பட்டது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருந்ததால் ஓட்டுனர் உரிமம் காலாவதியானது என்பதும், அவ்வாறு காலாவதியான ஓட்டுனர் உரிமத்தின் கால அவகாசம் அவ்வப்போது நீடிக்கப்பட்டு வந்தது என்பதும் தெரிந்ததே
கடைசியாக டிசம்பர் 31-ஆம் தேதி வரை ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட வாகனங்களின் ஆவணங்களின் செல்லுபடி காலம் நீட்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அந்த கால அவகாசமும் முடிவடையும் நிலையில் இருப்பதால் தற்போது மீண்டும் ஒரு முறை இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களின் செல்லுபடி காலம் மார்ச் 31-ஆம் தேதி வரை நீடிப்பு என மத்திய அரசு சற்றுமுன் அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது