இப்படி பண்ணுனா அப்புறம் நீட் எதுக்கு? – புதுச்சேரியால் கடுப்பான மத்திய அரசு!

Puducherry
Prasanth Karthick| Last Modified வியாழன், 21 ஜனவரி 2021 (13:24 IST)
புதுச்சேரி அரசு மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர நீட் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் புதிய சட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தியது. அதை தொடர்ந்து புதுச்சேரி அரசும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இந்நிலையில் புதுச்சேரி அரசின் இந்த முடிவுக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த மாதிரியான உள் ஒதுக்கீடுகளால் நீட் தேர்வே நீர்த்து போகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :