1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 16 அக்டோபர் 2024 (16:48 IST)

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு! அமைச்சரவை ஒப்புதல்..!

மத்திய அரசின் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்காக 3 சதவீத அகவிலைப்படி உயர்த்தி வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 
 
இதன் மூலம், 1 கோடியே மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இதில் ஆதாயம் பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த தகவலை உறுதி செய்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (டிஏ) மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணம் (டிஆர்) 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இது ஜூலை 1, 2024 முதல் அமலாகும். 2024 ஜனவரி 1 முதல் 4% உயர்த்தப்பட்ட அகவிலைப்படி, தற்போது 3% உயர்வால் மொத்தம் 53% ஆக அதிகரித்துள்ளது.
 
 
Edited by Mahendran