1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 18 மே 2018 (15:20 IST)

சொன்னதை சொன்ன மாதிரி செய்ய பாஜகவால் தான் முடியும் - தமிழிசை பன்ச்

பாஜக சொன்னவாறு  காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்துக் கொடுத்துள்ளது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
காவிரி வழக்கில் திருத்தப்பட்ட மத்திய அரசின் வரைவுத் திட்டத்தை, உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, காவிரி அமைப்பு ஆணையத்தை பருவ மழைக்கு முன்பாக செயல்படுத்த மத்திய அரசிற்கு உத்தரவிட்டு, காவிரி தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்றம் இன்று முடித்து வைத்துள்ளது.  
 
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், பாஜக அரசு சொன்னவாறு காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து தமிழக விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளது. 

காவிரி தொடர்பாக பாஜக வை கீழ்த்தரமாக பேசிய காங்கிரஸும், திமுகவும் இப்பொழுது எங்கே போய் மூஞ்சை வைத்துக் கொள்வார்கள். காவிரி பிரச்சனைக்கு மூல காரணமே திமுக தான் இப்பொழுது ஒன்றும் தெரியாதது போல் நடிக்கிறார்கள் என என காட்டமாக பேசியுள்ளார்.