வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 5 மார்ச் 2018 (19:59 IST)

கனிமொழி, வைரமுத்து, வீரமணி மீது வழக்கு பதிவு?

கனிமொழி, வைரமுத்து, கீ.வீரமணி ஆகியோரின் மீது முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வைரமுத்து பொதுமேடையில் ஆண்டாள் பற்றி தவறுதலாக பேசினார் என்று பெரும் சர்ச்சை வெடித்தது. இதனை அரசியல் தலைவர்கள் சிலர் மற்றும் இந்து அமைப்பினர் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தனர். 
 
அதேபோல், திமுக கட்சியை சேர்ந்த கனிமொழி பேட்டி ஒன்றில், திருப்பதியில் பாதுகாப்பு இருக்கும் பணியாளர்களின் உரிமைகள், சம்பளம், பாதுகாப்பு குறித்து பேட்டி அளித்து இருந்தார். இதுவும் விமர்சனங்களுக்கு உள்ளாகியது. 

மேலும், திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கி.வீரமணி, ராமாயணம், மனு நீதியை கொளுத்த வேண்டும் என்று பேசி இருந்தார். இதற்கும் பலர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். 
 
இந்நிலையில் இம்மூன்று சம்பவங்களுக்கு எதிராகவும் சிவசேனா கட்சியின் தமிழ் மாநில தலைவர் ராதா கிருஷ்ணன் சென்ற 3 ஆம் தேதி புகார் அளித்து இருந்தார்.
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கனிமொழி, வைரமுத்து, வீரமணி மீது முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்யலாம் என தீர்ப்பு அளித்துள்ளனர்.