1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VM
Last Updated : சனி, 5 ஜனவரி 2019 (18:21 IST)

அரசு பள்ளிகளில் ஸ்போக்கன் இங்லீஸ் பயிற்சி கோரி வழக்கு : உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

அரசு பள்ளிகளில் ஸ்போக்கன் இங்லீஸ் பயிற்சி வகுப்புகளை துவங்க எட்டு வாரங்களில் பரிசீலனை செய்து முடிவெடுக்க வேண்டுமென, தமிழக பள்ளிக்கல்வித் துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  


 
திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசு கல்விக்காக ஆண்டுக்கு 27 ஆயிரம் கோடி செலவிடுகிறது, ஆனாலும் போதியஆங்கில பேச்சுத்திறன் இல்லாததால், உயர்கல்வி வேலைவாய்ப்பு பாதிப்பப்படுகிறது. இதனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் தமிழ் வழி பள்ளிகளில் ஸ்போக்கன் இங்லீஸ் பயிற்சி வகுப்புகளை நடத்த  வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
 
நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் அனிதா சுமந்த் அடங்கிய அமர்வு முன்பு இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஸ்போக்கன் இங்லீஸ் பயிற்சி வகுப்புகள் துவங்குவது என்பது மாநில கல்விக் கொள்கை சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறினார்கள். எனினும் அப்பாவு அளித்த மனுவை பரிசீலித்து எட்டு வாரங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வி துறை செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.