திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: திங்கள், 6 நவம்பர் 2017 (11:11 IST)

கைது செய்யப்பட்ட கார்ட்டூனிஸ்ட் பாலாவுக்கு ஜாமீன்

நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்த குடும்பம் குறித்த கார்ட்டூன் ஒன்றை வரைந்ததற்காக பிரபல கார்ட்டூனிஸ்ட் பாலா நேற்று சென்னையில் கைது செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே



 
 
இந்த நிலையில் கார்ட்டூனிஸ்ட் பாலா கைதுக்கு பல்வேறு கட்சி தலைவர்களும், பத்திரிகையாளர்களும் கண்டனம் தெரிவித்த நிலையில் சற்று முன்னர் அவர் நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நெல்லை நீதிமன்றம் கார்ட்டுனிஸ்ட் பாலாவுக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட்டுள்ளது.
 
இந்த நிலையில் நீதிமன்றத்திற்கு செல்லும்போது செய்தியாளர்களிடம் பேசிய பாலா, தான் வரைந்த கேலிச்சித்திரத்தில் எந்தவித உள்நோக்கமும் இல்லை என்றும் கந்துவட்டி கொடுமையால் நெருப்பில் எரிந்த குழந்தை இறந்ததான் கோப வெளிப்பாடே தனது கார்ட்டூன்' என்றும் அவர் கூறினார்.