செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: திங்கள், 30 அக்டோபர் 2017 (12:23 IST)

பிக்பாஸ் வின்னரின் மனைவி மீது சமூக வலைத்தளத்தில் அவதூறு கருத்து: போலீசில் புகார்

சமீபத்தில் முடிவடைந்த தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் வின்னர் சிவபாலாஜியின் மனைவியும் நடிகையுமான மதுமிதா மீது மர்ம நபர்கள் சமூக வலைத்தளத்தில் அவதூறு கருத்துக்களை பரப்பி வரும் நிலையில் இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.



 
 
தெலுங்கு நடிகர் சிவபாலாஜிக்கும் தமிழ் நடிகை மதுமிதாவுக்கும் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
 
இந்த நிலையில் மதுமிதா குறித்து பிரபல சமூக வலைத்தளம் ஒன்றில் அவதூறு கருத்துக்களை ஒருசிலர் பரப்பி வருகின்றனர். இதுகுறித்து மதுமிதாவின் கணவர் சிவபாலாஜி ஐதராபாத் சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
 
நடிகை மதுமிதா 'குடைக்குள் மழை, அமுதே, யோகி, அறை எண் 305ல் கடவுள் உள்பட ஒருசில படங்களில் நடித்துள்ளார். சிவபாலாஜி, மதுமிதா இருவரும் இணைந்து 'இங்கிலீஷ்காரன்' என்ற படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.