1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 24 ஆகஸ்ட் 2022 (19:21 IST)

பைக் மீது கார் மோதி விபத்து- பதறவைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு

erode
ஈரோடு மாவட்டத்தில்  இரு சக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்து ஏற்பட்டது. பதறவைக்கும் இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானி அருகயுள்ள பகுதியில் இன்று அதிவேகத்தில் வந்த கார் ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, அங்கு சாலையோரம் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது மோதியது.

இந்தக் கோர விபத்தில் இருவர் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து குறித்து சிசிடிவி காட்சிகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதைப் பார்ப்போரைப் பதறவைப்பதாக உள்ளது.