சிறப்பு ரயில்சேவைகள் ரத்து - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள முக்கிய பகுதிகளிலிருந்து போதிய பயணிகள் வருகை இல்லாததால் சில ரயில்களின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது
. உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பரவிவருகிறது. இந்தியாவிலும் இந்தத் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. இதைக்குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
இந்நிலையில் கொரொனா பரவலைக் கடுப்படுத்த மக்கள் கூடும் பொது இடங்களில் அரசு பாதுகாப்பு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
முன்பை விட தற்போது கொரோனா பரவலில் வேகம் அதிகரித்துள்ளது. எனவே மக்கள் அடிக்கடி வெளியூர் மற்றும் வெளிமாவட்டங்களுக்குச் செல்வது குறைந்துள்ளது.
எனவே, தமிழகத்தில் உள்ள முக்கிய பகுதிகளிலிருந்து போதிய பயணிகள் வருகை இல்லாததால் 12 ரயில்களின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளதாவது:
ராமேஸ்வரம் – கன்னியாகுமரி; கோவை – பெங்களூர் ; கோவை- சென்னை செண்ட்ரல் உள்ளிட்ட வழித்தடங்களில் செல்லும் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளனர்.