வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 14 பிப்ரவரி 2024 (11:40 IST)

ஒரே நாடு ஒரே தேர்தல் மாதிரி காமெடியான கொள்கை இருக்க முடியுமா? – மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம்!

stalin
மத்திய அரசு கொண்டு வரவுள்ள ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ கொள்கைக்கு எதிரான தீர்மானத்தை இன்று தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார்.



தற்போது இந்தியாவில் ஜனநாயக முறையில் மாநில தேர்தல்கள், நாடாளுமன்ற தேர்தல் தனித்தனியாக நடந்து வருகின்றன. இந்நிலையில் தேர்தல் செலவினங்களை குறைக்கவும், தேர்தலை எளிமைப்படுத்தவும் மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலை சேர்த்து ‘ஒரு நாடு ஒரே தேர்தல்’ என ஒரு தேர்தலாக கொண்டு வர மத்திய பாஜக அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு எதிர்கட்சிகளிடையே பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.


இந்நிலையில் இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிரான தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். அப்போது ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து விமர்சித்த அவர் “அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி அமைத்து, ஒன்றியத்தில் ஆட்சி கவிழுமானால் அனைத்து மாநிலங்களவையை கலைத்துவிட்டு தேர்தல் நடத்துவார்களா? அல்லது சில மாநிலங்களில் ஆட்சிக் கவிழ்ந்து தேர்தல் நடத்தும் சூழல் ஏற்பட்டால் ஒன்றியத்தில் ஆட்சியில் இருப்பவர்கள் பதவி விலகுவார்களா? இதைவிட காமெடியான கொள்கை இருக்க முடியுமா?” என விமர்சித்துள்ளார்.

Edit by Prasanth.K