ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து பிரச்சாரம்: வணிகர் சங்க தலைவர்


Abimukatheesh| Last Modified செவ்வாய், 5 ஜூலை 2016 (16:12 IST)
ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து 1000 இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்படும் என்று வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் கூறியுள்ளார்.

 

 
ஆரணியில் அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளாராக தமிழ்நாடு வணிக சங்க தலைவர் வெள்ளையன் கலந்து கொண்டு பேசினார். அதில் அவர் கூறியதாவது:-
 
ஆன்லைன் வர்த்தகத்தால் காலம் காலமாக சிறு வணிகத்தை நம்பி இருக்கும் கோடிக்கணக்கான பேர் வேலை இழக்கும் அபாயம் உள்ளன. மேலும் மத்திய அரசு அன்னிய வர்த்தகத்தை முழுமையாக இந்தியாவில் கொண்டு வர முயற்சி செய்து வருகின்றனர்.
 
ஆனால் அதனை மாநில அரசு முழுமையாக எதிர்த்து சட்டவிரோதம் என்று அறிவிக்க வேண்டும். புதிய சட்ட திருத்தம் வரி சட்டம் ஆகியவை வெளிநாட்டு வர்த்தகத்திற்கு சாதகமாக அமைத்துள்ளன. இதனால் நமது வியாபாரிகள் திணறி வருகின்றனர்.
 
உலக வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா வெளிவர வேண்டும் என்று தமிழகத்தில் முக்கிய தலை நகரங்களில் உண்ணாவிரதம் அதனை தொடர்ந்து கருப்பு சட்டை அணிந்து உலக வர்த்தக நகலை எரிப்பு போராட்டம் நடத்தப்படும்.
 
மேலும் வருகிற 21ஆம் தேதி ஆன்லைன் வர்த்தகத்திற்கு எதிராக 1000 இடங்களில் விழிப்புணர்வு தெருமுனை பிரச்சாரம் நடத்தப்படும் என்றார்.   
 
 


இதில் மேலும் படிக்கவும் :