திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 2 ஜூன் 2021 (16:05 IST)

கொரோனா சிகிச்சை பெற்று திரும்புவோருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி!

கொரோனா சிகிச்சை பெற்று வீடு திரும்பும் நபர்களுக்கு கட்டணமில்லா பேருந்து வசதி செய்து தர இருப்பதாக கோவை வட்டார போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது 
 
கோவையில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையை விட அதிகமாக கடந்த சில நாட்களாக கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உள்ளது 
 
இந்த நிலையில் கோவை கொடிசியா சிகிச்சை மையத்தில் இருந்து குணமடைந்து வீடு திரும்புவர்களுக்கு கட்டணம் இல்லாத பேருந்து வசதி செய்து தர இருப்பதாக கோவை மாவட்ட வட்டார போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது
 
கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்புபவர்கள் வாகனங்கள் கிடைக்காமல் அவதியுற்று அடுத்தே இந்த வசதி செய்து தரப்பட்டுள்ளது வட்டாரப் போக்குவரத்து கழக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு கோவையில் உள்ள கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு மகிழ்ச்சியான ஒரு அறிவிப்பாக உள்ளது