வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 30 மார்ச் 2019 (10:57 IST)

கட்டுமான நிறுவன அதிபர் கழுத்து இறுக்கிக் கொலை : சென்னையில் பரபரப்பு

சென்னை தாம்பரம் அடுத்துள்ள சேலையூருக்கு அருகே உள்ள அகரம் தென், அன்னை  சத்யாநகரில் உள்ள ஒரு சாரதாம்பாள் வீதியில் ஒரு விலையுயர்ந்த சொகுசு காரில் நின்றுள்ளது. 
நீண்டநேரமாக யாரும் அக்காரை எடுக்காதால் அருகே உள்ள மக்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். 
 
இதனையடுத்து போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிறுத்தபட்டிருந்த காரை சோதனை செய்தனர்.அதில் ஆண் ஒருவர் சடலமாக உள்ளதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 
 
பின்னர் அந்த சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.  மேலும் விசாரித்து போலீஸார் விசாரித்தனர்.
 
அதில் சென்னையை அடுத்த கீழ்கட்டளை அருள் முருகன் நகர் விரிவு 4வது தெருவை சேர்ந்த கட்டுமான தொழில் நிறுவன அதிபர் பழனிசாமி என்பவர் தான் காரில் சடலமாகக் கிடந்துள்ளதாக கண்டறிந்தனர்.
 
மேலும் ரஞ்சித் என்பவரிடம் பணம் வாங்குவதற்காக பழனிசாமி வந்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் இதுபற்றி தகவல் அறிந்து பழனிசாமியின் காரிலேயே கடத்திச் சென்று, கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர்.
 
இதனையடுத்து பழனிசாமியை கொலை செய்ததாக சோமசுந்தரம், மாரிமுத்து, ஆகிய  இருவர் சைதாபேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
இதற்கு முன்னதாக பழனிசாமியை  காணவில்லை என்று அவரது உறவினர்கள் போலீஸில் புகார் தெரிவித்திருந்தனர் எனபது குறிப்பிடத்தக்கது.