திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Updated : புதன், 2 அக்டோபர் 2019 (21:37 IST)

நீட் ஆள்மாறாட்டம்: விசாரணைக்கு பின் இடைத்தரகர் விடுவிப்பு

நீட் ஆள்மாறாட்டம் விவகாரம் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவையே உலுக்கிய நிலையில் இந்த விவகாரத்தில் பல இடைத்தரகர்கள் செயல்பட்டிருப்பதாகவும், அவர்களை பிடித்து விசாரணை செய்தால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் கோவிந்தராஜ் என்ற இடைத்தரகர் பிடிபட்டார். அவரை தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் இடைத்தரகர் கோவிந்தராஜிடம் போலீசார் விசாரணை நடத்தினர். நீட் ஆள்மாறாட்டம் குறித்து கோவிந்தராஜிடம் இரண்டு நாட்கள் விசாரணைக்கு பின் இடைத்தரகர் கோவிந்தராஜை சிபிசிஐடி விடுவித்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனால் அவரிடம் நடத்திய விசாரணை குறித்த விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இடைத்தரகர் கோவிந்தராஜ் எந்தெந்த நீட் பயிற்சி மையங்களுடன் தொடர்பு வைத்திருந்தார் என்பது குறித்தும், அவருக்கு உதவியவர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தியதாகவும் அடுத்தகட்ட விசாரணையை கருத்தில் கொண்டு அவரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருப்பதாகவும் சிபிசிஐடி தரப்பில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் மேலும் ஒரு இடைத்தரகரை சிபிசிஐடி போலீசார் தேடி வருவதாகவும் இந்த இடைத்தரகரின் பின்னணியில் மொத்தம் 5 பேர் இருப்பதாகவும், அனைவரையும் கைது செய்ய வலை விரித்துள்ளதாகவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.