1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 26 ஆகஸ்ட் 2023 (14:21 IST)

தடைகள் எல்லாத்தையும் உடைக்கணும்.- பிரபல நடிகை டுவீட்

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி உணவு மாணவர்களுக்கு அளிக்கும் திட்டம் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில்  நேற்று முதல் தமிழகம் முழுவதில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருக்குவளையில் முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்த நிலையில் மற்ற பகுதிகளில் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தொடங்கி வைத்தனர்.

தமிழகத்தின் அரசுப் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம்   நேற்று முதல் தொடங்கி வைக்கப்பட்டது. இதற்கு, அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், சமூக ஆர்வர்லர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

இதுபற்றி தமிழ் சினிமாவின் பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமார் தன் சமூகவலைதள பக்கத்தில்,

‘அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சத்தான காலை உணவை கொடுக்கிறது வரவேற்க வேண்டிய விஷயம். ஊட்டச்சத்து குறைப்பாடு குழந்தைகளுக்கு எவ்வளவு பெரிய பிரச்சனை. கல்விக்கு ஏற்படும் தடைகள் எல்லாத்தையும் உடைக்கணும். இதுபோன்ற முன்னெடுப்புகளைக் கொண்டு வரும்  முதல்வர் மு.க. ஸ்டாலின்  சாருக்கு நன்றி! ‘’’என்று தெரிவித்துள்ளார்.