வேளாண் சட்ட நகலை எரித்துப் போகி கொண்டாட்டம்: பெரும் பரபரப்பு
வேளாண் சட்ட நகலை எரித்துப் போகி கொண்டாட்டம்
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தினத்திற்கு முந்திய நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படும் என்பதும் பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தும் நிகழ்வுகள் நடக்கும் என்பதும் தெரிந்ததே அந்த வகையில் இன்று அதிகாலை முதல் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் போகி பண்டிகையை முன்னிட்டு மக்கள் பழைய பொருட்களை சேகரித்து வருகின்றனர். இதனால் பல இடங்களில் புகை மூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் அவதி படுகின்றனர் என்பதும் சுவாசப் பிரச்சினை உள்ளவர்களும் கடும் அவதிப்படுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் டெல்லியில் கடந்த 50 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளில் வேளாண் சட்ட நகலை எரித்து போகி பண்டிகை கொண்டாடி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் வேளாண் சட்ட நகலை எரித்து விவசாயிகள் போகி பண்டிகையை கொண்டாடினார்கள். வாலாஜாபாத் உத்திரமேரூர் ஆகிய பகுதிகளில் சட்ட நகல்களை எரித்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
போகி பண்டிகை அன்று பழைய பொருட்களை எரித்துக் கொண்டாட வேண்டும் என்ற நிலையில் வேளாண் சட்ட நகலை எரித்து கொண்டாடுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது