வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 26 மார்ச் 2024 (09:32 IST)

வாரிசு அரசியலில் சவுமியா அன்புமணி வரமாட்டார்: அண்ணாமலை கொடுத்த விளக்கம்..!

திமுகவை வாரிசு அரசியல் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்து வரும் நிலையில் சவுமியா அன்புமணியின் வரவு வாரிசு அரசியல் இல்லையா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

சவுமியா அன்புமணி 24 வயதில் நேரடியாக அரசியலுக்கு வரவில்லை என்றும் அவர்களுடைய குடும்பத்தினர்  உதவியால் அரசியலுக்கு வரவில்லை என்றும் அவர் ஏற்கனவே பசுமை அமைப்பு என்ற ஒரு அமைப்பை கடந்த பல ஆண்டுகளாக நடத்தி மக்களுக்காக சேவை செய்து உள்ளார் என்று அண்ணாமலை தெரிவித்தார்.

பசுமை அமைப்பின் மூலம் ஏராளமான சேவை செய்த பின்னர்தான் அவர் அரசியலுக்கு வந்துள்ளார் என்றும் அவர் திருமணம் ஆகி குழந்தை பெற்று வாழ்க்கையில் செட்டில் ஆன பிறகு தான் அரசியலுக்கு வந்துள்ளார் என்றும் நேரு மகன் போல் மு க ஸ்டாலின் மகன் போல் சிறுவயதிலேயே வரவில்லை என்றும் அதனால் சௌமியா அன்புமணி வாரிசு அரசியல் என்ற பட்டியலில் வரமாட்டார் என்றும் அண்ணாமலை விளக்கம் அளித்தார்.

Edited by Siva