தமிழகத்தில் கருப்பு பூஞ்ஞை நோய் தொற்று நோயாக அறிவிப்பு
தமிழகத்தில் நாளொன்றுக்கு 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டுவரும் நிலையில், சமீபத்தில் புதிய வகை நோய்த்தாக கருப்பு பூஞ்சை தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.
இதைத்தடுக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய் தொற்று நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: மத்திய அரசு அறிவுறுத்தியதன் பேரில் மாநிலங்களுக்கு கருப்பு பூஞ்ஞை நோய் தொற்று நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.