வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 29 செப்டம்பர் 2021 (11:42 IST)

என்ஆர்.காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்க பாஜக சதி?

என்ஆர்.காங்கிரசை கவிழ்த்து ஆட்சியை கவிழ்த்து பாஜக ஆட்சி அமைக்கும் தருணத்துக்கு காத்திருக்கிறது என ஏ.வி.சுப்ரமணியன் பேச்சு. 

 
காங்கிரஸ் திட்டங்களைத்தான் இப்போது என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி செயல்படுத்தியுள்ளது. புதுவையில் தற்போதும் கவர்னர் மூலம் மறைமுகமாக பாஜக ஆட்சி செய்வதாகவே கருத வேண்டியுள்ளது.
 
ஏனெனில் பாஜகவை பொறுத்தவரை மக்களை நேரடியாக சந்தித்து ஓட்டு கேட்டு வெற்றி பெற மாட்டார்கள். அதற்கு பதிலாக ஆள் பிடிக்கும் வேலை, கவர்னர் மூலமாக அதிகாரத்தை கைப்பற்றுவதையே செய்வார்கள். இந்த ஆட்சியிலும் இது தொடர்கிறது. 
 
கடந்த 5 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் நாங்கள் போராடினோம். இப்போதைய ஆட்சி கவர்னரிடம் சரணடைந்துள்ளது. ஓடு மீன் ஓட உறுமீன் வர காத்திருக்குமாம் கொக்கு என்பது போல என்ஆர்.காங்கிரசை கவிழ்த்து ஆட்சியை கவிழ்த்து பாஜக ஆட்சி அமைக்கும் தருணத்துக்கு காத்திருக்கிறது என புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.