செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 2 பிப்ரவரி 2024 (16:59 IST)

பா.ஜ.க குறி வைக்கும் 9 தொகுதிகள் இவைதான்.. வெற்றி கிடைக்குமா?

பாராளுமன்ற தேர்தலில் பாஜக தனி ஒரு அணியாக அமைத்து போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில் அதிமுக பக்கம் இதுவரை எந்த கட்சியும் கூட்டணி சேரவில்லை. 
 
ஆனால் தேமுதிக, பாமக, தமாக உள்ளிட்ட கட்சிகள் பாஜக கூட்டணியில் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மோடியின் செல்வாக்கை வைத்து தமிழகத்தில் ஒன்பது தொகுதிகளை எப்படியும் வென்று விட வேண்டும் என்று பாஜக தீவிர முயற்சி செய்து கொண்டிருப்பதாக தெரிகிறது. 
 
குறிப்பாக  கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய கொங்கு பகுதியில் உள்ள தொகுதிகள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தென்காசி ஆகிய தென் தமிழகத்தில் உள்ள தொகுதிகள் மற்றும் தென்சென்னை, கிருஷ்ணகிரி ஆகிய தொகுதிகளில் பாஜக வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் இந்த ஒன்பது தொகுதிகளில் தீவிர கவனம் செலுத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva