வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 5 ஏப்ரல் 2023 (10:58 IST)

10ஆம் வகுப்பு வினாத்தாள் வெளியான விவகாரம்: பாஜக பிரமுகர் கைது..!

தெலுங்கானா மாநிலத்தில் தற்போது பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்று வரும் நிலையில் இதில் இந்தி பாடத் தேர்வின் வினாத்தாள் வெளியான விவகாரத்தில் பாஜக பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக 10ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் இந்தி தேர்வு வினாத்தாள் வெளியானதால் மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இந்த விசாரணையில் தெலுங்கானாவில் பத்தாம் வகுப்பு இந்தி பாடத் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் பண்டி சஞ்சய் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். கமலாபூர் என்ற தேர்வு மையத்தில் இருந்து பாஜக பிரமுகர் புரம் பிரசாத் என்பவர் வாட்ஸ் அப் மூலம் வினாத்தாளை பண்டி சஞ்சய் என்பவருக்கு வினாத்தாளை அனுப்பி உள்ளதாகவும் இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran