வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 11 மார்ச் 2024 (14:47 IST)

பாஜக ஒரு தேசிய கட்சியே கிடையாது.. இந்தி கட்சி தான்: கார்த்திக் சிதம்பரம்

பாரதிய ஜனதா கட்சி ஒரு தேசிய கட்சியே கிடையாது என்றும் இந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே செல்வாக்கு உள்ள கட்சி என்றும் காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தபோது ஹிந்தி பேசும் மாநிலங்களில் மட்டும்தான் இந்துத்துவா என்ற முறையை கையில் எடுத்து பாஜக செல்வாக்குடன் நல்லது என்றும் இந்தி பேசாத மாநிலங்களில் அக்கட்சி செல்வாக்குடன் இல்லை என்றும் அதனால் அந்த கட்சியை தேசிய கட்சி என்று எடுத்துக்கொள்ள முடியாது என்றும் இந்தி கட்சி என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

இந்தி பேசாத மாநிலங்களில் குஜராத் தவிர அந்த கட்சிக்கு வேறு எந்த மாநிலத்திலும் செல்வாக்கு இல்லை என்றும் அதனால் தான் ஓடி ஓடி அனைத்து கட்சிகளிடமும் கூட்டணி வைத்து வருகிறது என்றும் அவர் கூறினார்.

ஹிந்தி பேசும் மாநிலங்களில் மட்டும் இந்துத்துவா என்ற வெறியை மக்களிடம் தூண்டிவிட்டு இஸ்லாம் மக்களை அடக்க வேண்டும் என்ற கொள்கையுடன் பாஜக நடந்து கொள்கிறது என்றும் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்தார்.

Edited by Siva