Last Modified: வெள்ளி, 24 பிப்ரவரி 2017 (05:54 IST)
தேர்வுக்கு முன்னரே தேர்வு முடிவு தேதி. கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அசத்தல்
பொதுவாக ஒவ்வொரு வருடமும் 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் மற்றும் ஏப்ரல் நடைபெற்று மே மாதம் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும். முதலில் தேர்வு தேதிகளும், தேர்வுகள் முடிந்த பின்னர் சில நாட்கள் கழித்து தேர்வு முடிவு தேதிகளும் அறிவிப்பது வழக்கமாக இருந்து வருகிறது.
ஆனால் தற்போது புதியதாக கல்வி அமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ள செங்கோட்டையன் தேர்வு நடைபெறும் முன்பே தேர்வு முடிவு தேதியை அறிவித்து அசத்தியுள்ளார். இதன்படி மே மாதம் 12ம் தேதி 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளும், மே மாதம்19ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியிடப்படும் என்று நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பள்ளிக் கல்வித்துறை குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
தேர்வு முடிவு தேதி முன்கூட்டியே தெரிந்துவிட்டது என்பதால் மாணவர்கள் தேர்வுக்கு பின்னர் உயர்படிப்பு குறித்த திட்டங்களுக்கு வசதியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.