ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 7 மே 2020 (22:06 IST)

மாடு மீது வரைந்த அழகான படம்… பிரபல இயக்குநர் புகழாரம் …வைரல் வீடியோ

இந்த உலகில் மனிதனின்  படைப்பாற்றலுக்கும் அவனது திறமைகளுக்கும் எல்லையே இல்லை. இந்த நிலையில், ஒரு மாட்டின் மீது அழகான முறையில் மனிதனின் உருவத்தை வரைந்துள்ளது அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது.

மாட்டின் கழுத்து அருகில் மனிதனின் தலையும் ,அதன் காலில் அவனுடைய காலும் வரையப்பட்டுள்ளது. மாடு நடக்கும்போது மனிதனும் நடந்து செல்வது போலுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

இதுகுறித்து இயக்குநர் சேரன் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோவின் கீழ்ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில், மிகவும் ரசித்த வீடியோ.. இந்த கிரியேட்டர் எங்க இருக்கார்னு கண்டுபிடிச்சு கொரோனா முடிஞ்சதும் ஒரு தடவை கட்டிப்பிடிக்கனும்... என்ன கற்பனை ... என்ன யூகம்... அழகு...