ரஜினியின் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம்
ரஜினியின் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம்
சென்னை வேளச்சேரியில் ரஜினியின் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதற்கு எதிராக குரல் கொடுக்கவில்லை என்று கூறி சென்னை வேளச்சேரி காந்திநகரில், நடிகர் ரஜினிகாந்தின் உருவபொம்மையை எரித்து ஏழை, எளியோர், நடுத்தர சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், அரசியலுக்கு வருவது போன்று பேசி இளைஞர்களை குழப்பி வருவதால், ரஜினிகாந்த் மீது மோசடி வழக்குப்பதிவு செய்யக் கோரி முழக்கமிட்டனர். இதை அடுத்து, ரஜினிகாந்தின் உருவபொம்மையை எரித்து கபாலி திரைப்படத்தை தடை செய்யுமாறு வலியுறுத்தினர்.
தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்காத ரஜினிகாந்த், அவருடைய படங்களில் மட்டும், தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பது போன்ற வசனங்களை பேசி வருவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.